த நா 07 அல 4777

கண்ணீரை போலே
கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது

வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...ஏ



சொர்க்கம் மதுவிலே சொக்கும் இரவிலே
சொர்க்கம் மதுவிலே சொக்கும் இரவிலே
வாம்மா அருகிலே நீ காட்டு தீப்போலே
மனதை கட்டிப்போடாதே
இரவில் தனியாய் தூங்காதே
வயசுப்போனால் திரும்பாதே
(சொர்க்கம் மதுவிலே..)

லைஃபுக்கு தேவை போதை
இது தானே மாடர்ன் கீதை
இளமை பாதை அதிலே நான் மேதை
கனவுக்கு ஏன் கட்டுப்பாடு
கவலைகள் தூக்கிப்போடு ஆடிப்பாடி
நடு ரோடே வீடு
அடடடடா லக லக லக
பேச்செனப் பேச்சு லக லக லக
அனு அனுவாய் சூடானது மூச்சு
மெது மெதுவாய் ஏறுது ஆசை
உயிர் நடுவில் உடைகின்ற ஓசை
(சொர்க்கம் மதுவிலே..)

எங்கெங்கோ கண்கள் பாயும்
அங்கங்கே கைகள் மேயும்
மேகம் தேயும் புது மாயம் மாயம்
சண்டேஷன் ஏற்றம் தோற்றம்
இது மாடர்ன் பூக்கள் கூட்டம்
ஜாடை காட்டும் மனம் வாலை ஆட்டும்
நரம்புகளோ போடுது கூச்சல்
இமை இடுக்கில் மன்மத காய்ச்சல்
இரவிலே ஹே ஏ ஹேய் வாலிப கூச்சல்
இதயத்திலே ரகசிய நீச்சல்
(சொர்க்கம் மதுவிலே..)



ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்
ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்
ஹார்ட் என்னும் இன்பாக்ஸில் அழகாய் வந்து நிரம்புகிறாய்
ஏனோ நீ எப்போதும் எங்கே துணை மிரட்டுகிறாய்
அவுட் கோயிங் பேசாமல் சைலண்டாய் மிரட்டுகின்றாய்

டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்
டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்
டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்

ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்
ஹார்ட் என்னும் இன்பாக்ஸில் அழகாய் வந்து நிரம்புகிறாய்

யாரோ நீ நெஞ்சில் பறவிட்டாய் என் கண்ணில் தீயை ந்றிய விட்டாய்
ஜன்னல் திறந்தாய் மின்னல் விழுந்தாய் மின்னல் மறைந்தாய்
ஏனோ நீ என்னை திருடிவிட்டாய் தூக்கத்திலும் என்னை அலயவிட்டாய்
உந்தன் அழகால் எந்தன் வயதை பிடுங்கிவிட்டாய்
தீக்குச்சி எதுவுமின்றி தோன்றிடும் தீயுமின்றி
தீப்பற்ற வைக்குதடா தீண்டும் உந்தன் குரலே
மெல்ல வரும் மழையுமின்றி மஞ்சல் நிற வெயிலுமின்றி
வானவில் தெரியுதே உன் அழகிலே
(ஐ போனின்..)

என் தூக்கம் உன்னை திட்டிவிட்டதே
மழை மேகம் உன்னை தேடுகின்றதே
உந்தன் நினைவில் எந்தன் தனிமை வாழுகின்றதே
கால் கடுக்க காத்துக்கிடக்கையிலே
கடிகார நேரம் கடக்கையிலே
காதல் கொடுக்கும் வலி என்னையே கொல்லுகிறதே
சந்திரனால் அணல் அடிக்க சூரியன் போல் ஏறெடுக்க
சூழ்நிலை மாறுதடா உந்தன் நீலவிழியால்
மங்கி மங்கி நீ அடிக்க தந்திரம்தான் நான் படிக்க
மோகங்கள் கூடுதடி முன்னழகில்
(ஐ போனின்..)



Comments :

0 comments to “த நா 07 அல 4777”


Post a Comment