நினைத்தாலே இனிக்கும் 2009
பாடல் அளவு
அல்லா 9.5 MB
அழகாய் பூக்குதே 8.8 MB
கல்லூரி 2.4 MB
நண்பனை பார்த்த 9.6 MB
நாட்கள் நகர்ந்து 2.8 MB
பியா பியா 8.5 MB
செக்ஸி லேடி 8.1 MB


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஒ ஹோ ஹோ ..
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே
ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே
ஒ ஹோ ஹோ ..
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
ஒ ஹோ ஹோ ..
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..



நண்பனை பார்த்த தேதி மட்டும்

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டிக்கொண்டது என் ஞாபகத்தில்
என்னுயிர் வாழும் காலமெல்லாம்
அவள் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மறவாதே
(நண்பனை..)

சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்
இளமை இது ஒரு முறைதான்
துளி மிச்சம் இல்லாமல் இசைப்போம்
கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்
எரிமலையோ வெறும் மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்போம்
வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்
(நண்பனை..)

விதவிதமாய் கனவுகளை தினம்
நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது
நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்
சுமைகள் என்று ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்
பெண்களென்றும் ஆண்களென்றும்
உள்ள பாகுபாட்டையும் வெறுப்போம்
மழை தூவும் வெயில் நேரம்
அது போலே மனது
மலர் போலே தடுமாறூம் வயது
(நண்பனை..)


Comments :

0 comments to “நினைத்தாலே இனிக்கும் 2009”


Post a Comment