ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்
ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்

மின்னல் ஒன்றை பார்த்தேன்

சாலை ஓரத்தில் சேலை கட்டிய

சோலை ஒன்றை பார்த்தேன்


கண்ணுக்குள் இங்கும் குட்டி குட்டி தீவே

நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே


கண்ணுக்குள் இங்கும் குட்டி குட்டி தீவே

நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே

அலை ஆடிடும் கடல் போலவே

அடி நெஞ்சில் காதல் வந்து மோதும்

அதி காலையும் அந்தி மாலையும்

தொடுவானம் வண்ண கோலம் போடும்


ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்

மின்னல் ஒன்றை பார்த்தேன்

சாலை ஓரத்தில் சேலை கட்டிய

சோலை ஒன்றை பார்த்தேன்


சரணம் 1

தொட்டு தொட்டு செல்லும் காற்றினை

என்ன இது புது வாசனை

சுற்றி சுற்றி வரும் பூமியை

சுற்றி சுற்றி வர யோசனை


காலம் அதை நிறுத்தி பிடித்து

ஒரு சிறையில் போட வேண்டும்

கனவு அதை துரத்தி பிடித்து

இரு விழியில் போட வேண்டும்


சிறு குழந்தையை போல மாறுவோம்

எந்த விதி முறை யாவும் மீறுவோம்

சிற்றின்பம் அதை தொடலாமே தோழா


ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்

மின்னல் ஒன்றை பார்த்தேன்

சாலை ஓரத்தில் சேலை கட்டிய

சோலை ஒன்றை பார்த்தேன்



சரணம் 2


என்ன இடம் என்று பார்த்துதான்

மேகம் மழையினை தூருமா

எந்த கிளை என்று பார்த்துதான்

பறவைகள் வந்து கூடுமா


ஆசை அது உன்னை கேட்டு

உன் மனதில் வருவதில்லை

ஆணும் ஒரு பெண்ணும் சேர

எந்த தடையும் இங்கு இல்லை


நதி மலையினில் பிறக்கும் காரணம்

கடல் மடியினில் சென்று சேரவே

சிற்றின்பம் அதை தேடலாமே தோழா



ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்

மின்னல் ஒன்றை பார்த்தேன்

சாலை ஓரத்தில் சேலை கட்டிய

சோலை ஒன்றை பார்த்தேன்


கண்ணுக்குள் இங்கும் குட்டி குட்டி தீவே

நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே


அலை ஆடிடும் கடல் போலவே

அடி நெஞ்சில் காதல் வந்து மோதும்

அதி காலையும் அந்தி மாலையும்

தொடுவானம் வண்ண கோலம் போடும்




அழகான நீயும் ஆளான நானும்
அழகான நீயும் ஆளான நானும்

சந்தித்த காலம் காதலின் காலம்

ரகசிய இடம் தேடி அலையுதே நாணங்கள்

அதிசய துணை தேடி நீந்துதே ஆசைகள்

மௌனத்தில் மறு வாசல்

திறக்கின்ற நொடி நேரம்

காதலின் முதல் படியா ஹே..

அழகான நீயும் ஆளான நானும்

சந்தித்த காலம் காதலின் காலம்

சரணம் 1

நீ எழுதிதந்த கவிதைகள் எல்லாம்

கண்ணுக்குள்ளே நிதம் செய்யுதடி யுத்தம்

உன் விரல் பட்ட ஒரு சில இடத்தில உதிருமா இன்பம்

வாடவே இல்லை


அழகிய அவதாரம் நீ கொடுத்தாய்

இரவை மலராக்கி நீ தொடுத்தாய்

ஹோ..இது தான காதல் இது தானா

ஹே தெரியாத உனக்கிது தெரியாதா

இடம் வளம் மாறியே இதயம் துடிக்குதே



அழகான நீயும் ஆளான நானும்

சந்தித்த காலம் காதலின் காலம்


சரணம் 2

புத்தம் புது ஞயானம்

கண்டேன் அடி நானும்

மார் அடித்தால் கூட

நீ எனக்கு வேணும்

உள்ளங்காலில் வானம்

பார்க்கிறேனே நானும்

கூட நீயும் வேணும் ,பொய் இல்லையே


காரணம் இல்லாமல் காதலித்தேன்

கலவரம் இல்லாமல் அனுமதித்தேன்

உனக்குள்ளே நான் கரைகின்றேன்

உன்னாலே நானும் தான் நிறைகின்றேன்

காதலின் அடிமையாய் நாமும் ஆனோமே




அழகான நீயும் ஆளான நானும்

சந்தித்த காலம் காதலின் காலம்

ரகசிய இடம் தேடி அலையுதே நாணங்கள்

அதிசய துணை தேடி நீந்துதே ஆசைகள்

மௌனத்தில் மறு வாசல்

திறக்கின்ற நொடி நேரம்

காதலின் முதல் படியா ஹே..



உயிரே உயிரை கொளுத்திவிடு
உயிரே உயிரை கொளுத்திவிடு
உச்ச நரம்பில் புதயளிடு
முத்த வேட்டை ஆட வா
மச்ச காட்டை மூட வா
எனக்காக சொர்க்கத்தில் இடம் போடு ஹே ..
கேட்காமல் செய்வேனே எப்படா ?

உயிரே உயிரை கொளுத்திவிடு
உச்ச நரம்பில் புதயலிடு
முத்த வேட்டை ஆட வா
மச்ச காட்டை மூட வா

உன்னை புதைந்து சிற்பம் ஒன்று செய்ய
எனக்கு நீ அனுமதி தருவாயா ?ஒ ஹோ ..
உன்னை நீயே ஓசை இன்றி நெய்ய
உன்னிடமே அனுமதி பெருவாயா ?ஹோ ஹோ ஹோ ..
சீதை வகையால் சீதை பாதியை
பதில் ஒன்று இல்லை அது தான் தொல்லையே
நிறை வகையால் நிறைத்து யார்
நதிகள் ஒன்று இல்லை அது தான் தொல்லையே
எனக்குள் உன்னை மெதுவாய்
இடம் மாற்ற வா

உயிரே உயிரை கொளுத்திவிடு
உச்ச நரம்பில் புதயலிடு

எனக்குள் உருளும் பாதரச தீயே
தொட்டதுமே பற்றி எறிவாயா ஹ ..ஹோ ..
மார்பில் குதித்த ஏவுகனை நீயே
வேறு தேகம் தூக்கி போவாயா ?
மயக்கத்தில் நான் தயக்கத்தில் நீ
கரக்கத்தில் காதல் கரை தாண்டுதோ
மஞ்சத்தில் நான் நெஞ்சத்தில் நீ
தஞ்சத்தில் நாணம் தவியாய் தவிக்குது
காதல் கரையை கடந்தால்
புயல் ஓயுமா ? ஒ ஹோ ஹோ ..

உயிரே உயிரை கொளுத்திவிடு
உச்ச நரம்பில் புதயலிடு
முத்த வேட்டை ஆட வா
மச்ச காட்டை மூட வா
எனக்காக சொர்க்கத்தில் இடம் போடு ஹே ..
கேட்காமல் செய்வேனே எப்படா ?



உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவர் மீதிலும் இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்பம் கற்பிக்கும் தபர்த்தம்

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வான்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாலே
அலைஅலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால் கரை வரக்கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போடா வேர் ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே
en சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்கா
தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வழிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சியதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன்
மறுபுறம் தகப்பன்
இரு கொல்லி எரும்பானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானால்
யார் காரணாம்
ஆஅஹாஅ ...
யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றஞ் தானே

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவர் மீதிலும் இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்பம் கற்பிக்கும் தபர்த்தம்

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வான்ழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை



Comments :

0 comments to “முத்திரை”


Post a Comment