கார்த்திக் அனிதா

ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்
ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்

உன்னால் தன்னந்தனி தீவானேன்

ஓ நெஞ்சே தினம் உன் நினைவு தீயாகி சுடும்

எங்கு இனி நான் போவேன்

மனதோடு என் காதல் அலை பாயுதே

மழை நின்று பின்னாலே குடை நீட்டுதே

கண்ணீர் துளிகள் மட்டுமே

வழி துணையாய் வந்ததே


ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்

உன்னால் தன்னந்தனி தீவானேன்


சரணம் 1

தோட்டத்தில் என் தோட்டத்தில்

ஒரு பூச்செடி பூத்ததடி

பார்கையில் கண் பார்கையில்

அது உதிர்ந்தே போனதடி

திருவிழா ஓ திருவிழா

என் வாழ்வில் நடந்ததடி

குழந்தையாய் சிறு குழந்தையாய்

மனம் தொலைந்தே போனதடி


எழுதிவிட்ட சிறு கதையில்

எழுத்து பிழைகள் இருக்கிறதே

காலம் போடும் விடுகதையில்

விடைகள் மறைந்து கிடக்கிறதே

விடை தெரிந்தாலும் என் அன்பே

வார்த்தை இன்றி ஊமை ஆகின்றேன்


ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்

உன்னால் தன்னந்தனி தீவானேன்


சரணம் 2


தேவதை ஒரு தேவதை என் எதிரில் நின்றாளே

தூக்கத்தில் நான் இருந்ததால்

அவள் தொலைந்தே போனாளே

ஆயிரம் ஒரே ஆயிரம்

புது கவிதை சொல்வாளே

மௌனமாய் நான் நின்றதால்

மீண்டும் மீண்டும் நான் எழுதத்தான்

காதல் ஒன்றும் தேரில்லை

என்றபோதும் என் நெஞ்சே

உண்மை மறக்க தெரியவில்லை

என்னை எரித்தாலும் என் அன்பே

காதல் நெஞ்சம் வெந்து விடாது



ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்

உன்னால் தன்னந்தனி தீவானேன்

ஓ நெஞ்சே தினம் உன் நினைவு தீயாகி சுடும்

எங்கு இனி நான் போவேன்

மனதோடு என் காதல் அலை பாயுதே

மழை நின்று பின்னாலே குடை நீட்டுதே

கண்ணீர் துளிகள் மட்டுமே

வழி துணையாய் வந்ததே










Comments :

0 comments to “கார்த்திக் அனிதா”


Post a Comment