கூட வருவியா? என் கூட வருவியா?

கூட வருவியா? என் கூட வருவியா?
கூட வருவியா? என் கூட வருவியா?

கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும் பாதை மாறிப் போகாமல்
வழித்துணை என நீயும் கடைசி வரையில் என்னோடு

கூட வருவியா? என் கூட வருவியா?
கூட வருவியா? என் கூட வருவியா?

என்னை எடுத்து உந்தன் கையில் என்று தந்தேன் என்று
இன்று நினைத்தேன் அன்று நடந்த அந்த விந்தைகளை
மலர்வனம் பூ பூப்பதும் விருந்தென தேன் தருவதும்
ஒரு மனம் ஓர் நொடியிலே தன்னை இழந்தே தவிப்பதும்
என்னவென்று புரிந்ததின்று இதற்கு எது எங்கு காரணம்
நீயில்லாமல் வாழ்க்கை ஒன்று இனியேது?

கூட வருவியா? என் கூட வருவியா?
கூட வருவியா? என் கூட வருவியா?

யாருமில்லா காதல் தீவில் உலகில் ஓர் மூலையில்
தன்னந்தனியே குடிலை அமைத்து அன்பு பரிமாறலாம்
தரை வரும் வான் தேவதையும் மழலைகள் போல் வரட்டுமே
கந்தர்வ பானங்களின் அமுதினைத் தான் தரட்டுமே
வெள்ளைப்பனியின் மலையின் ஓரம் வைர மணித்தேரின் ஊர்வலம்
கண்ணில் மின்னும் கன்னி கனவு நனவாக

கூட வருவியா? என் கூட வருவியா?
கூட வருவியா? என் கூட வருவியா?


Comments :

0 comments to “வால்மீகி”


Post a Comment