ஒரு காற்றில் அலையும் சிறகு
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..



அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியானதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழிநீரில் அழியும் ஓர் நேரம்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்

(அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ)


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்




பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்தத
அம்மையும் அப்பனும் தந்தத
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
போருல்லுக்கு அலைந்திடும் போருள்ளட்ட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவை
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே



கண்ணில் பார்வை ....
கண்ணில் பார்வை ....
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணிலாதபெரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும் ..
கனாவில் கூட இன்பம் காணாமல் என்ன ஜென்மம் ..
ஒ தெய்வமே இது சம்மதமோ .....

(கண்ணில் பார்வை )

யார்க்கும் போல் ஒரு அன்னை தந்தை எனக்கும் இருந்தும் உண்டு
யார்க்கும் போல் ஒரு தேகம் தாகம் எனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில் ....
ஒழியாய் போலே ஒருதுணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ

(கண்ணில் பார்வை )

வீதி என்றொரு வீடும் உண்டு எனக்கது சொந்தம் என்று ..
வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது
வேலிஎல்லாம் சோலைக்காக அந்தநாள்காக
கண்கள் கொண்ட தெய்வமும் கவலையும் கொண்டு சென்றதேனோ
(கண்ணில் பார்வை )



Comments :

0 comments to “நான் கடவுள்”


Post a Comment