அடடா வா அசத்தலாம்
அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

எதுவந்தா எனக்கு என்ன
ஒதுங்காத நானும் சொன்னா

I wanna get so hot and naughty with you ohh... hO

கொண்டாடா வாழ்க்க கொண்டாடா
வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா

I wanna get so hot and naughty with you ohh hO

hO heyy heyy heyyy

சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்

come close to baby Let me drive you crazy

ஆடித்தான் தீர்ப்போம்

Oh come touch me baby
Boy I feel so sexy

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time



சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என் இமைகளை நீவினாய்

நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே

உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே

ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே




சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே


ஒ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே
என்று முகில்கள் தேடக் கூடாதா
ஒ மழை இரவினில் குயிலின்
கீதம் துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும்
பலரின் கனவுகள் யார் அறிவார்
அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால்
அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் உயிரே எங்கே
பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்று வெளியே இல்லையே ....
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே....

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேனே
விழி நனைந்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் முன்னே
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஒரு புள்ளி ஆகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
ஓரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமா

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை


காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ
காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போல ஆட உனக்குள் நான்
மாறாதே மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னைப்போல்
தீராதே கண்ணோடு என்றுமே
உயிர் ஈரம் எப்போதும் என்னை போல் என்னை போல்

நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
நடு காற்றில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் நாடேதோ போகுதே போகுதே



சுட்டா சூரியனே பொத்துகிட்டுப் போகலாம்டா! ஆஹ் ..ஆ ..ஆ ..
சுட்டா சூரியனே பொத்துகிட்டுப் போகலாம்டா! ஆஹ் ..ஆ ..ஆ ..

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா !

அடிச்சா வச்ச குறி சிக்கனுமய்யோ

புடிச்சா சமுத்துரம் மாட்டணுமய்யோ

நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ

இழுத்தா பூமி நம்ம கையிலய்யய்யோ

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல


சுட்ட சூரியன பொத்துகிட்டு போகலாண்டா

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா


சரணம் 1

நேர்கொட்டுல எதிரியை வச்சு வச்சு

நெஞ்சு நிமித்தனும் பதக்கத்த தச்சு தச்சு

போர்பாட்டுனா அலைகள நைச்சு நைச்சு

பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு

வெளிச்ச மரமொன்னு மொலச்சாச்சு

நெருப்பு விதையோன்னு கையோட

நெனச்சு வரமொன்னு கெடச்சாச்சு

இனிப்பு மழை இப்போ நெஞ்சோட

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

மேகம் கருக்குது மழை வர பாக்குது

வீசி அடிக்குது காத்து இளங்காத்து


சரணம் 2


நெஞ் தேசத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு

நரம்போட்டத்தில் வலை ஒண்ணு நெஞ்சு நெஞ்சு

மனக்காட்டத்தில் எரிமலை நெஞ்சு நெஞ்சு

எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு

பறக்கும் தட்டு போல் லேசாக

கனக்கும் மனசும் தான் பரந்தாச்சு !

வெடிச்ச சுவரு போல் இருந்தேன் நான்

இப்போ வெடிப்பெல்லாம் பூவாச்சு !


பல்லவி 2

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

அட கட்டறுத்து வீசுங்கடா காத்துப்போல

நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்துல

சுட்டா சூரியன பொத்துகிட்டு போகலாம்டா

ஆஹ் ஆ ஆ

எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா!


Comments :

0 comments to “சர்வம்”


Post a Comment