![]() |
பசங்க |
ஒரு வெட்கம் வருதே வருதே ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலைப்பாயுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே இது தரும் தடம் தடுமாற்றம் சுகம் மழை இன்று வருமா வருமா குளிர்க்கொஞ்சம் தருமா தருமா கனவென்னக் களவாடுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் நேரம் உனதா புது இன்பம் தாலாட்டுதே கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம் பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே வர வர வரக்கரைத்தாண்டிடுமே மேலும் சில காலம் உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன் உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன் ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே ஒரு வரி சொல்ல ஒரு வரி நான் சொல்ல எழுந்திடும் காதல் காவியம் அனைவரும் ஈர்க்கும் நாள் வரும் (மழை இன்று..) ஆ.. காற்றில் கலந்து நீ என் முகத்தினை நீயும் மோதினாய் பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய் தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம் நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே (ஒரு வெட்கம்..) அன்பாலே அழகாகும் வீடு அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்க்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும்போது வேறொன்றும் அதற்க்கில்லை ஈடு (அன்பாலே..) வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம் பூமியே நமக்கானது ஓ.. சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம் யாவுமே இயல்பானது மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை விதையாகுமே கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக மலரட்டும் எதிர்காலமே (அன்பாலே..) பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால் கார்த்திகை தினந்தோறுமே ஆ.. நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால் வாசனை துணையாகுமே ஆ... கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து வாழ்ந்திடு பிரியாமலே ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே தோல்விகள் வெறும் காணலே (அன்பாலே..) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “பசங்க”
Post a Comment