உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவம் வலியது
நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனில்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இதற்குள் எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்
யார் காரணம் ? யார் காரணம் ?
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல..
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம்தானே..
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.
மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாளே..
அலையலையாக ஆசைகள் எழும்ப அவன் வசம் விழுந்தானே
நதிவழி போனால் கரைவரக்கூடும் விதிவழி போனானே..
விதையொன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே
என் சொல்வது..???என் சொல்வது ?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப்போலே நட்பைக்காத்தான்..
காதல் தோற்கும் என்றா பார்த்தான்..
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.



சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும் !

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

நீ என்ன நானும் என்ன
பேதங்கள் தேவை இல்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்று தேங்கிடாதே
அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை
துணிந்தபின் வலி இல்லை, வெற்றியே !

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்
ஆசைக்கு வாழும் வாழ்க்கை ஆற்றிலே கோலமாகும்
பொய்வேடம் வாழ்வதில்லை மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகும் எந்நாளும் வாழும் வாழும்
சாத்திரம் நட்புக்கில்லை
ஆத்திரம் நட்புக்குண்டு.. காட்டவே !!!

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

எரியும் விழிகள் உறங்குவதென்ன
தெரியும் திசைகள் பொசுங்குவதென்ன
முடியும் துயரம் நிகழுவதென்ன
நெஞ்சில் நிழலென்ன
மறையும் பொழுது திரும்புவதென்ன
மனதை பயமும் நெருங்குவதென்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதிலென்ன

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ








Comments :

0 comments to “நாடோடிகள்”


Post a Comment