![]() |
சென்னை 600028 |
யாரோ யாருக்குள் இங்கு யாரோ பல்லவி ======= யாரோ யாருக்குள் இங்கு யாரோ யாரென்று கண்டு யார் சொல்வாரோ கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது யாரோ யாருக்குள் இங்கு யாரோ யாரென்று கண்டு யார் சொல்வாரோ கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது உண்ணும் சோறு நூறாகும் ஒன்றுக்கொன்று வேறாகும் உப்பில்லாமல் என்னாகும் உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்) சரணம்-1 ========= WarShip என்றும் நீரில் ஓடும் SpaceShip என்றும் வானில் ஓடும் FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே ஓஹோஹோஹோ FriendShip என்றும் தெய்வம் என்று Worship செய்வோம் ஒன்றாய் நின்று ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம் காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது நண்பா வா.. ஹே (யாரோ யாருக்குள்) சரணம்-2 ========= எங்கும் திரியும் இளமைத்தீவே என்றும் எரியும் இனிமைத்தீயே தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா என்னைக் கண்டா தன்னந்தனியா எட்டிப் போகும் சிக்கன்குனியா எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம் நாட்டிலுள்ள கூட்டணி போல் நாங்கள் மாற மாட்டோமே நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே நண்பா வா ஹே.. (யாரோ யாருக்குள்) யாரோ யாருக்குள் இங்கு யாரோ பல்லவி ====== ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடையில்லா ஓர் கேள்வி பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்) ஆ: காதல் வரம் நான் வாங்க கடைக்கண்கள் நீ வீச கொக்கைப் போல நாள்தோறும் ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ விடையில்லா ஒரு கேள்வி ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி சரணம்-1 ======= பெ: ஊரை வெல்லும் தோகை நானே உன்னால் இங்கு தோற்றுப் போனேன் கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே ஆ: ஓஹோஹோ நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய் நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய் உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன் பெ: காற்றில் வைத்த சூடம் போலே காதல் தீர்ந்து போகாது ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே ஆ: யாரோ பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ பெ: விடையில்லா ஒரு கேள்வி ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி சரணம்-2 ======= ஆ: உந்தன் ஆடை காயப்போடும் உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய் என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன் பெ: ஆஹாஹாஹா கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும் ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது சென்னைத் தமிழும் செந்தேன் தான் பெ: ஆசை வெள்ளம் பாயும்போது வங்கக்கடலும் வாய்க்கால் தான் அன்பே வா ஹா.. ஆ: யாரோ பெ: ம்ஹீம் ஹீம் ஆ: யாருக்குள் இங்கு யாரோ பெ: ஆஹா ஹா ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடையில்லா ஒரு கேள்வி பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி ஆ: காதல் வரம் நான் வாங்க கடைக்கண்கள் நீ வீச கொக்கைப்போல நாள்தோறும் ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடையில்லா ஒரு கேள்வி ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏனென்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை அந்த நேசம் இந்த பாசம் நட்பைப்போல எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை வாழ்க்கை அது எங்கு சென்று முடியும் அதை அறிந்ததில்லை (நட்புக்குள்ளே..) காதல் வலி அது தெரிவதில்லை நட்பின் வலி அது புரியவில்லை காதல் வலி அது தெரிவதில்லை நட்பின் வலி அது புரியவில்லை.. உன் பார்வை மேலே பட்டால் உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என் கின்றேன் விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் எனைச் சேர நீ எதை கேட்கிறாய்.. சொல் உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை எதுவென்று சொல்ல இல்லை ஒரு விவஸ்தை உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டுத் துடிக்க தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு என்று செய்தாயே நுரையீரல் தேடும் சுவாசமே விழி ஓரம் ஆடும் சொப்னமே மடியில் நீ வந்தால் சவுக்கியமே ஹே ஹே ஹே அன்பே உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என் கின்றேன் சில காதல் இங்கு கல்லரைக்குள் அடக்கம் சில காதல் இங்கே சில்லரைக்குள் தொடக்கம் அது போல அல்ல கல்லரையைக் கடந்திடும் சில்லரையை ஜெயித்திடும் என் காதல் உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டிப் படிப்பேன் அது போல காதல் சிகாகோவும் கண்டதில்லை சின்சினாவும் கண்டதில்லை சோவியத்தும் கண்டதில்லை என்பேன் மழை நாளில் நீதான் வெப்பமே வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே உளி ஏதும் தீண்டா சிற்பமே ஹே ஹே ஹே அன்பே உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் எனைச் சேர நீ எதை கேட்கிறாய் சொல் (2) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “சென்னை 600028”
Post a Comment