வெள்ளித்திரை


உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண் துகிலை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தப்பின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ..
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி..
(உயிரிலே..)



சூரியனே என் கண்ணைக் கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்பார்
என் கால் இனிமேல் சிம்மாசனம் ஏறும் நாள்
காலமெல்லாம் ஜாதகத்தில் யோகம் தான்
கேட்பதெல்லாம் செயற்கை காதல் எங்கும் பார்
கல்லூரிப் பெண்களும் என் போட்டோ மேலே ஆசைக் கொள்வார்
என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார்
மேல் மேல் மேல் மேலாக
பேஷன் இனிமேலே..
பேஷன் இனிமேலே..
உயர்வேனே மேலும் மேலும்
ரேஷன் விலை போலே
(சூரியனே...)

வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார்
வீதி எங்கும் கட்-அவுட் தோன்றும் பார்
ஒன் மோர் சூப்பர் ஸ்டார் என்றாலே இனி நாந்தானே
கூல்..
சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார்
கூட்டணிகள் ஆனால் அவை எட்டுமே
வாவ்..
டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே
சூப்பர்..
என் கார் செல்லவே தார் சாலை மூடி தாகம் உண்டே
என் வேர் உலகை பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த ஊரை ஆள்வேனே
கூல்..
செல்வாக்குக் கூட கூட சி.எம் ஆவேனே..










Comments :

0 comments to “வெள்ளித்திரை”


Post a Comment