ஆயிரத்தில் ஒருவன் 2009
பாடல் அளவு
செலிப்ரேசன் ஆப் லைஃப் 5.5 MB
இந்த பாதை 8.5 MB
மாலை நேரம் 9.6 MB
ஓ ஈசா மிக்ஸ் 10.1 MB
ஓ ஈசா க்ளப் மிக்ஸ் 9.5 MB
பெம்மானே 5.4 MB
தாய் தின்ற மண்ணே 6.2 MB
தாய் தின்ற மண்ணே - கிளாசிக் 6.6 MB
த கிங் அரைவ்ஸ் 5.3 MB
உன் மேல ஆசதான் 7.9 MB

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ
மன்னன் ஆளுவதோ...

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை...

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

மாலை நேரம்

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)



ஒம் மேல ஆசதான்..


ஒம் மேல ஆசதான்..
ஆனது ஆகட்டும் say to me babe..
போனது போகட்டும் give to me babe..
இது கனவு தேசம்தான்...
நினைத்ததை முடிப்பவன் one more tiger..
நினைத்ததை எடுப்பவன் give to me babe..
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே..
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே..


ஒம் மேல ஆசதான்..
ஆனது ஆகட்டும் say to me babe..
போனது போகட்டும் give to me babe..
இது கனவு தேசம்தான்...
நினைத்ததை முடிப்பவன் one more tiger..
நினைத்ததை எடுப்பவன் give to me babe..

என் எதிரே ரெண்டு பாப்பா..
கை வச்சா என்ன தப்பா..
தினுசான கேள்வியப்பா..
துடிப்பான காலமப்பா..
கடலேறும் கப்பலப்பா..
கர தட்டி நிக்குதப்பா..

பெண் தொட்டா மலையும் சாயும்..
நடுசாமம் நிலவும் காயும்..

தேசம் நாணம் தேகம் தேய்ந்தொழிந்து ஊசி போலே
தோலை மீட்பான்..

மனிதன் போட்ட வீடடா..
வாசல் இங்கே நூறடா...
உடலை விட்டு நீங்கடா..
உன்னை உற்றுப் பாருடா...

என் ஆச ரோசா..
கத்துக்கிட்டு முடிக்கலாம்.. ஒருவாட்டி வா..
நான் தானே ராசா..
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ...

ஈசனாலும் சாம்பல் மேல் உளன்று ஈசல் போலே ஆளை வீற்ப்பாய்..

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே..
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே..





Comments :

0 comments to “ஆயிரத்தில் ஒருவன் 2009”


Post a Comment