![]() |
பாண்டவர் பூமி |
தோழா தோழா தோழா தோழா கனவுத் தோழா தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும் உன்னை நான் புரிஞ்சுக்கணும் ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும் ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டால் காதலாகுமா அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா? நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்குள் தவறுகள் நடக்காது நட்புக்குள் தன்னலம் இருக்காது நட்புக்கு ஆண் பெண் தெரியாது நட்பு என்னும் நூலெடுத்து பூமியில் கட்டி நீ நிறுத்து நட்பு நட்புதான் காதல் காதல்தான் காதல் மாறலாம் நட்பு மாறுமா? காதல் ஒன்றும் தவறே இல்லை காதல் இன்றி மனிதன் இல்லை நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதுண்டு இப்ப நீயும் நானும் பழகுறோமே காதலாகுமா இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா? தோழா தோழா கனவுத் தோழா தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நீயும் நானும் வெகுநேரம் மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும் பிரியும் பொழுதில் சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி புரிதலில் காதல் இல்லையடி பிரிதலில் காதலைச் சொல்லி விடு காதல் காதல்தான் நட்பு நட்புதான் நட்பின் வழியிலே காதல் வளருமே! பிரிந்து போன நட்பினைக் கேட்டால் பசுமையான கதைகளைச் சொல்லும் பிரியமான காதலும் கூட பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும் ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம் ஆ... இது correct ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம் தோழா தோழா கனவுத் தோழா தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும். உன்னை நான் புரிஞ்சுக்கணும் ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும் ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம் அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம் கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு சிறு வீடு.. சிறு வீடு... ஒரு பக்கம் நதியின் ஓசை.. ஒரு பக்கம் குயிலின் பாஷை.. இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திரு வீடு விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பி விட தென்றல் வந்து வாசல் தெளித்து விட கொட்டும் பூக்கள் கோலம் வரையும் படி விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே தகதீம்ததீம்ததினதினனா.. தகதீம்ததீம்ததினதினனா.. தகதீம்ததீம்ததினதினதினதினதினனா.. தகதீம்ததீம்ததினதினனா.. தகதீம்ததீம்ததினதினனா.. தகதீம்ததீம்ததினதினதினதினதினதினதினதினதினனா.. கனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள கண்களாக ஜோடி ஜன்னல் வேண்டுமே பறந்தோடும் பறவைக்கூட்டம் இரவோடு தங்கிச்செல்ல மரகத மாடம் ஒன்று வேண்டுமே கொலுசொலியும்.. கொலுசொலியும்.. சிரிப்பொலியும்.. சிரிப்பொலியும்.. எதிரொலித்து எதிரொலித்து இசை வரணும்.. இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி பேசும் வார்த்தை கவிதையாகும்படி விரும்புதே... விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே கொடைக்கானல் மேகம் வந்து மொட்டைமாடி மேலே நின்று குடிதண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே வாழ்ந்தவர்கள் கதையைச் சொல்லி வருங்கால கனவை எண்ணி ஊஞ்சலாட தென்னை ரெண்டு வேண்டுமே தலைமுறை மாறும் போதும் பரம்பரை தாங்கும் வண்ணம் தங்கமணித் தூண்கள் ஏழு வேண்டுமே.. சிலர் நினைவாய்.. பெரும் கனவாய்.. அரண்மனையாய்.. அதிசயமாய்.. இது வருமோ.. நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி எல்லா உறவும் வந்து வாழும்படி விரும்புதே.. விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பி விட தென்றல் வந்து வாசல் தெளித்து விட கொட்டும் பூக்கள் கோலம் வரையும் படி விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே விரும்புதே மனசு விரும்புதே |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “பாண்டவர் பூமி”
Post a Comment