![]() |
மகேஷ் சரண்யா மற்றும் பலர் |
என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு (என் பாடல்..) கொள்ளைக்கொள்ளும் என்பாய் சேர்கையில் இல்லை தொல்லை எந்த நாளுமே சந்தம் சேராமல் இல்லை பாடல்கள் வாழ்வும் சங்கீதமே (கொள்ளைக்கொள்ளும்..) கடலில் நதியும் சேர அலைகள் உதவலாம் மனது உறவை சேர தன்மை விலகலாம் பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு (என் பாடல்..) எட்டுத்திக்கும் செல்லும் பாடலே எல்லை இல்லா அன்பின் கூடலே மாலை பூந்தென்றல் ஆடை சூடாதோ எதன் கானத்திலே (எட்டுத்திக்கும்..) செவியய் உரசும் பாடல் மறந்து போகலாம் மனதை உரசும் பாடல் உயிரில் தேங்குமே பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு (என் பாடல்..) காற்றே காற்றே எனக்கு முன்னே அவளை தேடி போ கண்கள் கண்ட கனவை எல்லாம் கையில் வாங்கி போ கடலேங்கே இருந்தாலும் நதி அங்கே ஓடி வரும் காலெங்கே இருந்தாலும் அவளை தான் தேடி வரும் உண்மையை சொல்லிப்போ .ஓ ..ஓ ..ஓ ... காற்றே காற்றே எனக்கு முன்னே அவளை தேடி போ கண்கள் கண்ட கனவை எல்லாம் கையி ல் வாங்கி போ அழகாக சிரித்தாலே அடி நெஞ்சை பறித்தாளே பறக்கிறதே இதயம் பறக்கிறதே அடையாளம் இல்லாமல் ஆள் யாரும் பார்க்காமல் மிதக்கிறதே விண்ணில் மிதக்கிறதே உன்னை தேடி வருகையிலே தூரங்கள் குறைகிறதே உன் கண்ணை பார்க்கையிலே பாரங்கள் குறைகிறதே தோள்கள் ரெண்டில் ரெக்கை முளைத்து தத்தித்தாவி விண்ணை இழுத்து வெண்ணிலவோடு கவிகள் உடைத்து விடியும் வரையில் கவிதை படிப்பேனே .. காற்றே காற்றே எனக்கு முன்னே அவளை தேடி போ கண்கள் கண்ட கனவை எல்லாம் நெஞ்சில் வாங்கி போ சிலையென்று சொன்னாலே உயிரெல்லாம் கல்லாகும் சிலையில்லை அவளும் சிலையில்லை மயிலென்று சொன்னாலே மழை என்று ஆகாதே மயில்லில்லை அவளும் மயில்லில்லை நான் காணும் ஓவியங்கள் அவள் பாத சுவராகும் நான் கேட்கும் சங்கீதம் அவள் சிணுங்கும் மொழியாகும் காதல் என்பது குட்டி பூனை எப்படி நுழையும் யாருக்கு தெரியும் காதல் என்பது கோவில் யானை மதம் பிடித்தாலோ தொல்லை தொல்லையோ ...ஓ ....ஓ .. காற்றே காற்றே எனக்கு முன்னே அவளை தேடி போ கண்கள் கண்ட கனவை எல்லாம் கையில் வாங்கி போ கடலேங்கே இருந்தாலும் அவளை தான் தேடி வரும் உண்மையை சொல்லிப்போ ...காற்றே.... |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “மகேஷ் சரண்யா மற்றும் பலர்”
Post a Comment