![]() |
பையா |
அடடா மழைடா அட மழைடா தந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க மனசுக்குள்ள குடை பிடிக்க கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு (அடடா மழைடா..) பாட்டு பாட்டு பாடாத பாட்டு மழைதான் பாடுது கேட்காத பாட்டு உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு தேவதை எங்கே என் தேவதை எங்கே அது சந்தோஷமா ஆடுது இங்கே உன்னைப் போல வேராரும் இல்ல என்னை விட்டா வேறாரு சொல்ல சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான் இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைச்சான் பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு போவது எங்கே நான் போவது எங்கே மனம் தள்ளாடுதே போதையில் இங்கே .. (அடடா மழைடா..) பின்னி பின்னி மழை அடிக்க மின்னல் வந்து குடை பிடிக்க வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம் மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம் கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு சுத்துதே சுத்துதே பூமி சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி ஹே சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம் எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம் (சுத்துதே..) சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே வளைகளை நீ விரித்தாய் சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய் அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட விழித்தே துடிக்கிறேன் (சுத்துதே..) இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உன்னை கேட்கிறேன் இது என்ன இன்று வசந்த காலமா இடைவெளி எனும் குறைந்துப்போகுமா இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த நினைவும் மறக்குமா (சுத்துதே..) என் காதல் சொல்ல நேரம் இல்லை என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உன்னை மறைத்தாலும் மறையாதடி உன் கையில் பேரை ஏந்தவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடி உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழை காலம் உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும் (என் காதல் ..) காற்றோடு கை வீசி நீ பேசினால் அந்த நெஞ்சோடு புயல் வீசுதே வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும் அடி இது ஏதோ புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும் ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே வேறேதும் நினைக்காமல் விழி மூடடி எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் (என் காதல் ..) ஹேய் யாரோடு யாரோ ஹேய் யாரோடு யாரோ இந்த சொந்தம் என்னப் பேரோ நேற்றுவரை நீயும் நானும் யாரோ யாரோதான் ஓர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல் கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்கும்மோ வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம் சருகாவே தொலையுதே தகும்மோ இது என்ன மாயம் சூரியனில் ஈரம் வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ நதி வந்து கடல் மீது சேறும்போது புயல் வந்து மலரோடு மோதும்போதும் மழை வந்து வேலோடு கூடும்போ யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் கடிகாரம் பார்பப்து இல்லையே நீரோடு வேரும் வேரோடு பூவும் தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே ஓர் உறவும் இல்லாமல் உணர்வும் சொல்லாமலே புது முகவரி தேடுதோ வாய் மொழியில் இல்லாமல் வழியும் சொல்லாமல் பாசக்கலவரம் சேருதோ ஒரு விண்மீன் நீயே மின்சாரத்தை தேடிவரும்போது என்ன ஞாயம் கூறு விதிதானே (வஞ்சம்..) பறவைக்குக் கால்கள் பகையானால் கூட சிறகுக்கு ச்ல்லம் இல்லையே துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள் இசைக்கின்ற போதும் இன்பமே சிறு விதையும் இல்லாமல் கருவும் கொல்லாமலே இங்கு ஜனனமும் ஆனதே ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல் காயம் புதிர்களைப் போடுதே அட அருகம் புல்லின் நுனியில் ஏறி நெறுப்பும் பனிபோல எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள் என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம் இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும் என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை (பூங்காற்றே..) மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே நிறுத்தாமல் சிரிக்கின்றேன் இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே கண்ணாடி சரி செய்து பின்னாடி உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன் பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன் வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்க்கும் வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும் (பூங்காற்றே..) அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும் இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் மலையன் ஒரு பக்கம் ஏதேதோ ஊர்த் தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி போகின்றேன் போகின்றேன் நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக அணைகின்றேன் எறிகின்றேன் மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்றூ புரிகிறதே வழித்துணையாய் நீ வந்தாய் போகும் தூரம் குறைக்கிறதே (என் நெஞ்சோடு..) (பூங்காற்றே..) துளி துளி துளி மழையாய் வந்தாளே... துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே... பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும், பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்.... செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா... சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா... அழகாய் மனதை பறித்து விட்டாளே....... துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே... தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ! காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ! நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்... கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்... பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்... அழகாய் மனதை பறித்து விட்டாளே.... செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா... சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா... சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாய்வேன்.. பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன், நெஞ்சிலே தாங்குவேன், காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள், காயமின்றி வெட்டி போட்டாள்.. உயிரை ஏதோ செய்தாள்... மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்... கனவில் கூச்சல் போட்டாள்... அழகாய் மனதை பறித்து விட்டாளே... செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா... சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா... துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே... துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே... |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “பையா”
Post a Comment