![]() |
அசல் |
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தா ஏ துஷ்யந்தா நீ மறந்ததை உன் சகுந்தலா மீண்டும் தந்தா கள்ள பெண்ணே என் கண்ணை கேட்கும் கண்ணே என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன் மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சை கொத்தி தின்றாய் எனக்கு உன்னை நினைவில்லையே பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும் மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தாய் மறந்தது என்ன கதை (ஏ துஷ்யந்தா..) அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆல மரத்திருட்டில் இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில் இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் வருடித் தந்தாய் மனதை திருடி கொண்டாய் வயதை அது கிளையோடு வேர்களும் பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன் பால் ஆற்றில் நீட் ஆடும் போது துவட்ட துண்டு இல்லை கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன் அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றுருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோ சில நேரம் (ஏ துஷ்யந்தா..) மான் ஆடும் மலை பக்கம் ஏரிக்கரை அருகில் மயில் ஆடும் ஜன்னல் கொண்ட மாளிகையில் அறையில் கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம் கரு நீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம் பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்து கொண்டு சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய் மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை மடியில் போட்டுக்கொண்டு புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய் அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றுருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோ சில நேரம் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ ஏ துஷ்யந்தா.. ஏ துஷ்யந்தா.. ஏ துஷ்யந்தா.. ஏ துஷ்யந்தா.. சிங்கம் என்றால் என் தந்தைதான் சிங்கம் என்றால் என் தந்தைதான் செல்லம் என்றால் என் தந்தை தான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் என் தந்தை தான் என் தந்தை தான் எல்லோருக்கும் அவர் விந்தை தான் விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே அழியாத உயிர் கொண்ட என் தந்தையே அழியாத உயிர் கொண்ட என் தந்தையே ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே நிலயான மனிதன் என வேர் சொல்லுமே நீதானே அசல் ஊர் சொல்லுமே உன் போல சிலர் இங்கு உருவாகலாம் உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா? எப்போதும் தோற்காது உன் சேவைதான் இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான் கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான் கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான் தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான் தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான் (சிங்கம்..) டொட்டொயிங் டொட்டொயிங் புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான் எப்போதுமே ஒன்னா நீ என்னைதான் அதிரி புதிடி பண்ணிக்கடா எதிரி உனக்கு இல்லையடா தொட்டதெல்லாம் வெற்றியடா தொடாதையும் தொட்டுக்கடா கண்களை தொட்டதும் கற்பு பதறுதே உன் கையால் நீ தொட்டால் கன்னி மொட்டுக்குள்ள டொட்டொயிங் டொட்டொயிங் அதிரி புதிரி பண்ணட்டுமா எகிறி எகிறி விழட்டுமா பின் அழகை பின்னட்டுமா ப்ச்சி பிச்சி தின்னட்டுமா காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே டொட்டொயிங் டொட்டொயிங் ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால் எத்தனை நாள் தின்னுவது இட்லி வடை சாம்பார் முக்கினியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை அப்பப்ப சலிச்சிருச்சே அப்பள வடை தோசை பணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற பங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற கத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங் பச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா ஓரம் போட்டு வளர்த்ததப்பா போத்திருக்குது போப்பா ஏப்ரல் மாத ஏறி போல ஹார்ட்டு எறங்குதே தங்கம் வெலைய போல சும்மா ஏறுதே புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே பச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில் டொட்டொயிங் டொட்டொயிங் (ஹேய் அதிரி..) டொட்டொயிங்... காற்றை நிருத்தி கேளு காற்றை நிருத்தி கேளு கடலை அழைத்து கேளு இவந்தான் அசல் என்று சொல்லும் கடமை செய்வதில் கொம்பன் கடவுள் இவனுக்கு நண்பன் நம்பிய பேருக்கு மன்னன் நன்றியில் இவன் ஒரு கர்ணன் அடடா அடடா அடடா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா காற்றில் ஏறியும் நடப்பான் கட்டாந்தரையிலும் படுப்பான் எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான் எமனுக்கு டீ கொடுப்பான் முகத்தை குத்துவான் பகைவன் முதுகை குத்துவான் நண்பன் பகையை வென்றுதான் சிரிப்பான் நண்பரை மன்னித்தெழுவான் போனான் என்று ஊர் பேசும் போது புயல் என வீசுவான் பூமி பந்தின் ஒரு பக்கம் மோதி மறுபுறம் தோன்றுவான் தோட்டங்களில் பூக்களில் தோட்டா தேடுவான் தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான் மாயமா மந்திரமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா நித்தம் நித்தமும் யுத்தம் இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம் நெற்றி நடுவிலும் சத்தம் நிம்மதி இவனுக்கு இல்லை படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம் படுக்கை முழுவதும் ரொக்கம் காட்டு சிங்கம்போல் வாழ்ந்தும் கண்களில் உறக்கம் இல்லை ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை இழிவென்று ஏசுவான் உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான் சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான் தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான் மாயமா மந்திரமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா எங்கே எங்கே மனிதன் எங்கே எங்கே எங்கே மனிதன் எங்கே மனிதன் உடையில் மிருகம் இங்கே ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே வரிகளால் அந்த வரங்களால் வாழ்க்கையில் ஞானம் கொண்டேன் காதல் என்றால் கண்ணில் யுத்தம் கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம் உறவும் நட்பும் பிம்பம் பிம்பம் உள்ளம் எங்கே நம்பும் நம்பும் பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி ஜனம் உண்மை மரணம் உண்மை தந்தானே கடவுள் தந்தானே அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய் செய்தானே மனிதன் செய்தானே கழுகை பிழந்து காணும் போது வானம் இருண்டிட கண்டேன் நான் உறவை திரந்து காணும் போது உலகம் தெரிந்திட கண்டேன் என் உடலை தொட்டாய் நான் மனிதன் ஆனேன் என் உயிரை தொட்டால் நான் கடவுள் ஆவேன் இங்கே இங்கே மனிதன் இங்கே இமயம் தாங்கும் இதயம் இங்கே காடும் மரமும் என் காலில் பூக்கள் குன்றும் மலையும் கூலாங்கற்கள் சாதிக்கவே பறக்கின்றேன் சாதிக்கவே பறக்கின்றேன்.. |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “அசல்”
Post a Comment